மும்பை

த்மாவதி இந்தித் திரைப்படம் தணிக்கை ஆவதில் மேலும் தாமதம் ஆகும் என்பதால் மார்ச் அல்லது ஏப்ரலிலாவது வெளி வருமா என்னும் சந்தேகத்தில் தயாரிப்பாளர் ஆழ்ந்துள்ளார்.

சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகி உள்ள பத்மாவதி இந்திப் படத்தைப் பற்றி நாளுக்கு நாள் சர்ச்சைகள் கிளம்பின.   பிறகு தணிக்கைக் குழுவினரால் சில கேள்விகள் கேட்கப்பட்டு படத்தின் தணிக்கை தள்ளி வைக்கைப்பட்டது.  அதைத் தொடர்ந்து  இந்தத் திரைப்படம் குஜராத் தேர்தலுக்காக வெளி வராமல் நிறுத்தி வைக்கப் பட்டது என ஒரு செய்தி பரவியது.   தேர்தலுக்கும் இந்தப் படத்துக்கும் சம்மந்தம் இல்லை என மற்றொரு தரப்பால் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது தேர்தல் முடிந்து இரு மாநிலங்களிலும் முதல்வர் தேர்வு நடைபெறுகிறது.   ஆனால் பத்மாவதி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து தணிக்கை வாரிய அதிகாரி ஒருவர், “தற்போது பத்மாவதி திரைப்படத்துக்கு முன்பே தணிக்கைக்கு காத்திருக்கும் திரைப்படங்கள் சுமார் 40 உள்ளன.   அவைகளை முடித்த பின்புதான் இந்தப் படத்தை தணிக்கை செய்ய முடியும்.   இது வருட இறுதி என்பதால் தணிக்கை உறுப்பினர்கள் பலரும் விடுமுறையில் உள்ளனர்.   சிலர் உடல்நலம் சரியில்லை என விடுமுறையில் உள்ளனர்.  எனவே தற்போது தணிக்கை செய்ய உறுப்பினர்கள் என்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

அது தவிர இந்தத் திரைப்படம் முதலில் தணிக்கைக்கு அளிக்கப்பட்ட போது இந்தக் கதை கற்பனைக்கதையா அல்லது உண்மை சம்பவம் அல்லது சரித்திரக் கதையா என்னும் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை.   அதன் பிறகு சரித்திரக் கதையை தழுவி எடுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டது.  அப்படிக் குறிப்பிடப் பட்டால் அந்த சரித்திரப் பின்னணி குறித்த தகவல்கள் தரப்பட வேண்டும்.   அவை உண்மையாக இருந்தால் மட்டுமே தணிக்கைக்கு அனுமதிக்கப்படும்”  என தெரிவித்தார்.

அதன் படி  தணிக்கை நடக்கவே ஜனவரி மாத இறுதி ஆகி விடும் என்பதால் இந்தத் திரைப்படம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளிவரலாம் என தெரிய வருகிறது.   ஆனால் சரித்திரப் பின்னணி குறித்த தகவல்கள் மறுக்கப்பட்டால் மேலும் தாமதமாகலாம் எனவும் அதனால் இந்தத் திரைப்படம் மார்ச் அல்லது ஏப்ரலுக்குள்ளாவது வெளி வருமா என்பது சந்தேகமா என தயாரிப்புக் குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.