பணம் செலுத்திய நடிகர்கள்: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வீடியோ குறித்து சாடிய குலாம்நபி ஆசாத்

டில்லி:

ம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம்  இரண்டாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சென்ற பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்துரையாடியும், அவர்களுடன் உணவு அருந்தும் காட்சியும் வெளியானது.

இதுகுறித்து கடுமையாக சாடியுள்ள  காங்கிரஸ் மூத்த தலைவர்கள குலாம்நபி ஆசாத், அவர்கள் பணம் செலுத்திய நடிகர்கள் என்று விமர்சித்து உள்ளார்.

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே காஷ்மீரில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டது. அங்கு பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அங்கு அமைதியான சூழல் நிலவி வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அங்கு சென்று நிலைமை குறித்து  ஆய்வு செய்தார். அப்போது சோபியான்  பகுதியில் உள்ள பொதுமக்களிடம்   உரையாடினார்.  சிலருடன் இணைந்து மதிய உணவு அருந்தினார். அத்துடன் அப்பகுதியில் பாதுகாப்பு பணியிலுள்ள வீரர்களுடனும் அஜித் தோவல் ஆலோசனை நடத்தினார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி  சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்பி ஆசாத், அஜித் தோவலுடன் சாப்பிடுபவர்கள், பணம் வாங்கிய நடிகர்கள் என்றும்,  யாராவது உங்களை பணத்திற்காக ஆதரிப்பார்கள்;  பணம் கொடுத்து யாரையும் உங்களுடன் அழைத்துச் செல்லலாம் விமர்சித்துள்ளார்.

காஷ்மீரின் சோபியான்  பகுதி வன்முறை சம்பவங்கள் அதிகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி