ஊரடங்கால் வேலை காலி.. விரக்தியில் தற்கொலை..

ஊரடங்கால் வேலை காலி.. விரக்தியில் தற்கொலை..

டெல்லி அருகே உள்ள குர்கான் பகுதியைச் சேர்ந்த முகேஷ்,பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

’’லாக்டவுன்’’ காரணமாக பெயிண்ட் வேலை எதுவும் வரவில்லை.

அவருக்கு நான்கு குழந்தைகள்.

கையில் இருந்த பணத்தில் சில நாட்கள் குடும்பம் ஓடியது.

பர்ஸ் காலி.

விலை உயர்ந்த ஒரு செல்போன் மட்டும் வைத்திருந்தார்.

ஏதாவது வேலை இருந்தால் செல்போனில் தொடர்பு கொண்டு தான், அவரை கூப்பிடுவார்கள்.

வேலையை விடக் குழந்தைகளுக்குச் சோறு போடுவது முக்கியமாகத் தோன்றியது, முகேஷுக்கு.

சந்தைக்குச் சென்று தன் செல்போனை இரண்டாயிரத்து  500 ரூபாய்க்கு விற்றார்.

அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வாங்கினார்.

அவர் வீட்டில் மின் விசிறி கிடையாது.

குழந்தைகளாவது நிம்மதியாகத் தூங்கட்டும் என்று நினைத்து  ’டேபிள் ஃபேன்’ ஒன்றும் வாங்கினார்.

எல்லாவற்றையும் மனைவியிடம் கொடுத்தவர், செல்போன் விற்ற பணத்தில் மிச்சம் இருந்த நோட்டுகளையும் ’’கடைசி சம்பளமாக’’ வழங்கினார்.

தன் நிலை இப்படி ஆகி விட்டதே என விரக்தி அடைந்த முகேஷ், வீட்டுக் கூறையில் தூக்குப் போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

– ஏழுமலை வெங்கடேசன்