இந்திய அமைதிப் பேச்சு வார்த்தை : பாக் குக்கு உதவ அமெரிக்கா மறுப்பு

வாஷிங்டன்

ந்தியாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தையை தொடர அமெரிக்கா உதவவில்லை என குரேஷி குற்றம் சாட்டி உள்ளார்.

பாகிஸ்தானின் தீவிர வாதப் போக்கால் இந்தியா அந்நாட்டுடனான அமைதிப் பேச்சு வார்த்தைகளை நிறுத்திக் கொண்டது.   புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றதும் மீண்டும் இந்தியாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்க விரும்புவதாக பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

அதை ஒட்டி வாஷிங்டனில் ஐநா கூட்டத்தில் கலந்துக் கொள்ளும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷியுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சந்திப்பு நடத்துவார் என கூறப்பட்டது.   இந்த நேரத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் மூன்று காவலர்களை கடத்திச் சென்று படுகொலை செய்தனர்.   அதனால் இந்தியா அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த மறுத்து விட்டது.

இது குறித்து ஐநா சபை கூட்டத்தில் குரேஷி, “இந்தியாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.  அதற்கு அமெரிக்கா உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டோம்.  அவ்வாறு கேட்டுக் கொண்டதற்கான காரணம் இது இரு நாடுகள் மட்டும் சம்மந்தப்பட்ட விஷயம் அல்ல என்பதாகும்.

எங்களால் எங்கள் நாட்டின் எல்லைப் பகுதிகளில் நடமாட முடியாமல் உள்ளது.  நாங்கள் முழுக்க முழுக்க இந்தியப் பகுதிகளை கண்காணிக்கும் பணியை செய்ய வேண்டி உள்ளது.   ஆனால் எங்களுக்கு உதவ அமெரிக்கா மறுத்து விட்டது.   இது சர்வ தேச பிரச்னை என்பதை அமெரிக்கா கவனத்தில் கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளார்.