இம்ரான் கான் ராஜினாமா செய்ய இரண்டு நாள் கெடு விதிக்கும் மத குரு

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இம்ரான் கானுக்கு இஸ்லாமிய மத குருவான மௌலானா ஃபஸ்லூர் ரகுமான் இரண்டு நாட்கள் கெடு விதித்துள்ளார்.

தற்போது பாகிஸ்தான் அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது.   அந்நாடு தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் விளைவாகச் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகிய நிதி நிறுவனங்கள் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்துள்ளன.  எனவே பாகிஸ்தான் அரசு தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் எடுத்து வரும் இந்த நடவடிக்கைகளினால் இஸ்லாமிய மத குருமார்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.   அவ்வகையில் ஜமியத் உலெமா இ இஸ்லாம் இயக்கம் மற்றும் கட்சியின் தலைவர் மௌலானா ஃபஸ்லூர் ரகுமான் தலைவர் தலைமையில் இஸ்லாமாபாத்தில் ஒரு பேரணி நடந்தது.

சுதந்திர பேரணி என பெயரிடப்பட்ட அரசுக்கு எதிரான இந்த பேரணியில் லட்சக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்.  இதில் பேசிய மௌலானா ஃபஸ்லூர் ரகுமான், “இனியும் எங்களால் அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாது.   நாங்கள் இம்ரான் கான் பதவியில் இருந்து இறங்க இரு நாட்கள் கெடு அளிக்கிறோம்.  அப்படி இல்லை எனில் மக்கள் பிரதமர் மாளிகையில் புகுந்து அவரை கைது செய்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி