இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்திய பாக் கிரிக்கெட் வீரர்

செயிண்ட் மோர்டிஸ். சுவிட்சர்லாந்து

பாக் கிரிக்கெட் வீரர் அஃப்ரிடி ரசிகை ஒருவரை இந்திய தேசியக் கொடியை சரியாக பிடிக்கச் சொல்லி உள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் செயிண்ட் மோர்டிஸ் நகரில் சேவாக்கின் டைமண்ட் செவன் அணிக்கும் ஷாஹித் அஃப்ரிடியின் ராயல்ஸ் அணிக்கும் இடையே பனிக் கிரிக்கெட் போட்டி நடந்தது.     இந்த போட்டியில் சேவாக், அஃப்ரிடி உள்ளிட்ட பல புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்துக் கொண்டனர்.     வீரர்களிடம் போட்டியின் இடையே ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

பாகிஸ்தான் விரர் அஃப்ரிடியுடன் ஒரு இந்திய ரசிகை புகைப்படம் எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார்.   அப்போது அந்தப் பெண் இந்திய தேசியக் கொடியை சுருட்டிக் கையில் வைத்திருந்தார்.   அதற்கு அஃப்ரிடி, “இந்திய தேசியக் கொடிக்கு எப்போதும் மரியாதை அளிக்க வேண்டும்  சுருட்டிப் பிடிப்பது தவறு.    விரித்துப் பிடித்து கொடியுடன் இருவரும் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.” எனக் கூறினார்.

அதன் பின் விரித்துப் பிடித்த இந்திய தேசியக் கொடியுடன் அஃப்ரிடியும் அந்தப் பெண்ணும் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.   இந்த தகவல் பரவி இப்போது அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.