பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகள் மரணம் : இங்கிலாந்தில் இருந்து விரைந்தார்

ஹெட்டிங்லி, இங்கிலாந்து

பாகிஸ்தான் நாட்டின் பிரபல கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் புற்றுநோயால் மரணம் அடைந்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரான ஆசிப் அலி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர். தற்போது அவர் இங்கிலாந்துடனான ஒரு நாள் பந்தயத்தில் விளையாடி வருகிறார். அவர் இந்த போட்டிகளில் 2 அரை சதங்கள் அடித்து பெறும் புகழ் பெற்றுள்ளார். இறுதியாக அவர் ஜெட்டிங்லியில் நடந்த போட்டியில் கலந்துக் கொண்டார்.

ஆசிப் அலியின் மகள் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இந்த பெண்ணை ஆசிப் அலி அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அனுமதித்திருந்தார். இது குறித்து ஆசிப் தனது டிவிட்டரில் ஏற்கனவே பதிந்திருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆசிஃப் அலியின் மகள் மரணம் அடைந்து விட்டார். அதை ஒட்டி அவர் உடனடியாக இங்கிலாந்தில் இருந்து கிளம்பி உள்ளார்.

ஆசிப் அலி தனது டிவிட்டரில் ”4-வது வகை புற்றுநோயால் பீடிக்கப்பட்டு என்னுடைய மகள் அவதிப்பட்டு வந்தார். அதனால்அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது எனது மகள் இறந்த செய்தி அறிந்ததும், எனக்கு ஒருமணிநேரத்தில் இஸ்லாமாபாத் செல்ல விசா வழங்கிய அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. நீங்கள் என் இளவரசிக்காக இறைவனிடம் பிராத்தியுங்கள்” என செய்தி வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.