ஸ்லாமாபாத்

டாலருக்கு நிகரான பாகிஸ்தான் கரன்சி மதிப்பு கடுமையாக சரிந்து வரலாறு காணா வீழ்ச்சி அடைந்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் தற்போது பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.   இந்நாட்டின் முக்கிய வர்த்தக பங்குதாரரான இந்தியா புல்வாமா தாக்குதலுக்கு பிறகு வர்த்தக தடை விதித்துள்ளது.   இந்நாட்டுக்கு முக்கிய உணவுப் பொருட்கள் இந்தியாவில் இருந்து சென்றுக் கொண்டிருந்தது.

தற்போதைய தடையால் உணவுப் பொருட்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டு விலைவாசி அதிகரித்துள்ளது.  மேலும் அந்நாட்டுக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய அந்நிய செலாவணி அதிகம் செலவு செய்து வருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் மத்திய வங்கி அதாவது அந்நாட்டின் ரிசர்வ் வங்கியில் தற்போது அந்நிய செலாவணி இருப்பு கணிசமாக குறைந்துள்ளது.   அதை ஒட்டி டாலருக்கு நிகரான பாகிஸ்தான் கரன்சி மதிப்பும் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இன்றை நிலவரப்படி ஒரு டாலருக்கு நிகரானபாகிஸ்தான் கரன்சி மதிப்பு ரூ.147 ஆக உள்ளது.   இது வரலாறு காணாத வீழ்ச்சி ஆகும்.