Random image

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மனைவி மரணம்

ண்டன்

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்  மனைவி குல்சும் புற்று நோயால் மரணம் அடைந்தார்.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மனைவி பேகம் குல்சும்.    நவாஸ் ஷெர்ஃப் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்து சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.   இவர் தற்போது அடியாலா சிறையில் தண்டனை  பெற்றுளார்.

அவருடைய மகள் மற்றும் மருமகனும் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர்.    மனைவி பேகம் குல்சும் பேரில் உள்ள சொத்துக் குவிப்பு புகாரில் விசாரணை நடந்து வருகிறது.

குல்சும் லண்டனில் புற்று நோய் காரணமாக  வெகு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.    சிகிச்சை பலன் இன்றி அவர் லண்டன் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.  குல்சும் மரணம் அடைந்த தகவல் நவாஸ் ஷெரிஃப், அவர் மகள் மற்றும் மருமகனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேகம் குல்சுமின் இறுதி சடங்குகள் லண்டனில் நடைபெற உள்ளன.   இதில் கலந்துக் கொள்ள நவாஸ் செரிஃப் அவரது மகள் மற்றும் மருமகன் பரோலில் செல்வார்கள் என தெரிய வந்துள்ளது.