பாக் எல்லையில் மூன்றாம் நாளாக துப்பாக்கி சூடு : பள்ளிகள் மூடல்

ஸ்ரீநகர்

ம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் மூன்றாவது நாளாக துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் அத்து மீறி நுழைவதும், இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நிகழ்த்துவதும் வழக்கமான ஒன்றாகி வருகிறது.

மூன்றாவது நாளாக இன்றும் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்திய ராணுவத்தினரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

இரு பக்கத்திலும் உயிர் இழப்போ, காயம் அடைந்ததாகவோ செய்திகள் ஏதும் இல்லை.

இதைத் தொடர்ந்து பதட்டம் நிகழ்வதால் அந்தப் பகுதியில் உள்ள் ஆறு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.