ஸ்லாமாபாத்

காஷ்மீர் விவகாரத்தைச் சர்வதேச நீதிமன்றம் எடுத்துச் செல்ல பாகிஸ்தான் அரசிடம் போதிய சான்று இல்லை என வழக்கறிஞர் கவார் குரேஷி கூறி உள்ளார்.

கடந்த மாதம் 5 ஆம் தேதி இந்திய அரசு விதி எண் 370ஐ விலக்கிக்  கொண்டதால் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. காஷ்மீர் மாநிலம் தற்போது ஜம்மு மற்றும் காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. லடாக் பிரதேசம் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான் இந்த விவகாரத்தை உலகின் பல நாடுகளுக்கு எடுத்துச்  சென்றும் எந்த நாடும் அவருக்கு உதவவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலும் அவர் கோரிக்கையை நிராகரித்தது. அமெரிக்க அதிபர் டிரம்பிடம் இம்ரான் கான் இது குறித்து முறையிட்டார் பிரான்ஸ் நாட்டில் நடந்த ஜி 7 நாடுகள் கூட்டத்தில் கலந்துக் கொண்ட டிரம்பை இந்தியப் பிர்ஹ்டம்ர் மோடி சந்தித்துப் பேசினார். அதன் பிறகு காஷ்மீர் விவகாரம் குறித்து டிரம்ப் பேசுவதை நிறுத்தி விட்டார்.

இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல உள்ளதாகப் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்தது.  ஆனால் பாகிஸ்தான் நாட்டின் சரவர்தேச நீதிமன்ற வழக்கறிஞர் கவார் குரேஷி, “காஷ்மீரில் இனப் படுகொலையை இந்திய நடத்துவதாகப் பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உத்தேசித்துள்ளது. ஆனால் அதற்கான எவ்வித சாட்சியமோ சான்றோ பாகிஸ்தான் அரசிடம் கிடையாது. போதிய அளவு சான்றுகள் அல்லது சாட்சியம் இல்லாமல் பாகிஸ்தானால் வழக்கு தொடர முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.