சறுக்கும் ரன் வேட்டை – தோல்வியை நோக்கி பாகிஸ்தான்

டான்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக ரன் வேட்டையில் வீரம் காட்டிய பாகிஸ்தான், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 307 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு தடுமாறி, தோல்வியை நோக்கி சென்று கொண்டுள்ளது.

பாகிஸ்தான் அணி 214 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இமாம் உல் ஹக் மட்டுமே அரை சதம் அடித்தார். அதனையடுத்து முகமது ஹபீஸ் 46 ரன்களை அடித்தார்.

பாக்கர் சமான் மற்றும் சோயப் மாலிக் ஆகிய இருவரும் டக் அவுட். 3 விக்கெட்டுகள் விழும் வரை, பாகிஸ்தான் வெல்வதற்கு வாய்ப்புண்டு என்றே கருதப்பட்டது. ஆனால் அதற்கடுத்து தேவையற்ற ஷாட்களை ஆடி, தேவையில்லாமல் விக்கெட்டுகளை விரைவாகப் பறிகொடுத்தனர்.

தற்போது விக்கெட் கீப்பர் சர்ஃப்ராஸ் அகமது மட்டுமே நம்பிக்கை தரும் வகையில் ஆடிவருகிறார். கைவசம் 3 விக்கெட்டுகளை மட்டுமே வைத்துக்கொண்டு 308 ரன்கள் என்ற எண்ணிக்கையைத் தொடுவது சுலபமல்ல என்பதால், பாகிஸ்தானின் தோல்வி உறுதி என்றே தெரிகிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-