ண்டன்

ற்போது தலைமறைவாக உள்ள பாகிஸ்தான் தலைவர் அல்தாஃப் ஹுசைன் சாரே ஜகான் சே அச்சா பாடலைப் பாடிய வீடியோ சமூக தளங்களில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் வசித்து வந்த அல்தாஃப் ஹுசைன் முத்தாகிதா குவாமி இயக்கம் என்னும் கட்சியைத் தொடங்கியவர் ஆவார்.  இவர் பாகிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறிக் கடந்த 1990களில் லண்டனில் தஞ்சம் புகுந்தார்.   அதன்பிறகு அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்றார்.  ஆயினும் அவர் அங்கிருந்தே தனது கட்சியை இயக்கி வருகிறார்.   பாகிஸ்தான் இவரைத் தலைமறைவாக உள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி விதி எண் 370ஐ ரத்து செய்த இந்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.  மேலும் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.  மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.   பல நாடுகளுக்கும் ஐநா பாதுகாப்புக் குழுவுக்கும் புகார்கள் அனுப்பி உள்ளது.   காஷ்மீர் விவகாரம் குறித்து துருக்கி மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.   ஆனால் லண்டனில் வசிக்கும் பாகிஸ்தான் தலைவர் அல்தாஃப் ஹுசைன் பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

கடந்த சனிக்கிழமை அல்தாஃப் ஹுசைன் சமூகத் தளத்தில் வெளியிட்ட நேரடி ஒளிபரப்பு ஒன்றில், “காஷ்மீர் நடவடிக்கைகள் இந்திய மக்கள் ஆதரவுடன் இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளன.  பாகிஸ்தான் அரசுக்குத் தைரியம் இருந்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைக்கட்டும்.  விதி எண் 370ஐ விலக்குவது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும்.

பாகிஸ்தானின் ராணுவத்தினர் மற்றும், தலைவர்கள் இத்தகைய நாடகத்தை நிறுத்த வேண்டும்.  இல்லையெனில் அவர்கள் ராணுவத்தை அனுப்பி காஷ்மீர் மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.  பாகிஸ்தான் காஷ்மீர் வாசிகளைத் தவறாகப் பயன்படுத்தி பாகிஸ்தானை ஒப்புக் கொள்ளும்படி வலியுறுத்தி வருகின்றனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

தனது உரையின் முடிவில் இந்தியாவைப்  புகழ்ந்து பாடும் பாடலான சாரே ஜகான் சே அச்சா என்னும் பாடலை இசைத்துள்ளார்.  இந்த பாடலின் பொருள்  “உலகில் மிகச் சிறந்த நாடான இந்தியா நம்முடையது” என்பதாகும்.  இந்தப் பாடலை பாகிஸ்தான் தலைவர் இசைத்தது பலராலும் பரப்பப் பட்டு வைரலாகிறது.   ஆனால் இந்த நேரலை எங்கிருந்து மற்றும் எப்போது பதிவானது என்பது சரிவரத் தெரியவில்லை.

[youtube https://www.youtube.com/watch?v=PywnsDHdYAE?feature=youtu]