Random image

பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு வார்த்தை நடத்த மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு

ஸ்லாமாபாத்

பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தொடர்ந்து அமைதிப் பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தன.  ஆனால் கடந்த 2015 ஆம் ஆண்டு பதான்கோடி விமான படை தளத்தில் பாக் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.   இதனால் இந்தியா கடும் அதிருப்தி அடைந்தது.   அதை ஒட்டி பாகிஸ்தான் உடன் இருந்த அனைத்து உறவுகளையும் இந்திய அரசு துண்டித்துக் கொண்டது.    அத்துடன் அமைதிப் பேச்சு வார்த்தையும் நின்று போனது.

இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார்.   அவர் முதல் கட்ட அமைதி பேச்சு வார்த்தைகளை  இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மட்டத்தில் தொடங்கக் கோரி மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இம்மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா சபை பொதுக்கூட்டம் நிகழ உள்ளது.  இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஜ்மூத் குரேஷி ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.   அப்போது இருவரும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது மட்டுமின்றி அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த இந்திய பிரதமர்  மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்தாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.