சீக்கியர்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளித்த பாக் காவல்துறை

பெஷாவர்

பெஷாவர் நகரில் சிக்கியர்கள் இருசக்கர வாகனம் செலுத்தும் போது ஹெல்மெட் அணிய தேவை இல்லை என காவல்துறை அறிவித்துள்ளது.

சுமார் 60 ஆயிரம் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தான் மாநிலம் கைபர் பக்துங்குவா ஆகும். இந்த மாநிலத்தில் உள்ள பெஷாவ்ர் நகரில் சுமார் 15 ஆயிரம் சீக்கியர்கள் வசித்து வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டில் சீக்கியர்களுக்கு சிறுபான்மை சமூக அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.

கைபர் பக்துங்குவா மாநில சட்டப்பேரவையில் ஒரு சீக்கிய உறுப்பினர், ”எங்கள் வழக்கப்படி தாங்கள் தலைப்பாகை அணிவதால் இரு சக்கர வாகனம் செலுத்தும் போது ஹெல்மெட் அணிய முடிவதில்லை. அதனால் எங்களுக்கு ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என் கேட்டுக் கொண்டார்.

இதை மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அதை ஒட்டி பெஷாவர் நகர போலீசாரும் இதற்கு அனுமதி அளித்துள்ளனர். அந்த அனுமதியின் படி தலைப்பாகை அணிந்த சீக்கியர்கள் இரு சக்கர வாகனம் செலுத்தும் போது ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.