புது டெல்லி:

பாகிஸ்தான் உளவாளிகளிடம் இருந்து இந்திய வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்திய ராணுவம் எச்ச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய ராணுவ தெரிவிக்கையில், ஆரோக்கிய சேது போன்ற ஒரு ஆப்-ஐ பாகிஸ்தான் உளவாளிகள் உருவாக்கி, அதன் மூலம் இந்திய ராணுவ வீரர்களை கண்காணித்து வருகின்றனர். இதனால் இந்திய ராணுவ வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி உடன் கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் மொபைலில் உள்ள செயலியின் மூலம், “நீங்கள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான நபரின் அருகில் உள்ளீர்கள்” என்று எச்சரிக்கும் வகையில் ஆரோக்கிய சேது ஆப்பை மத்திய அரசு வடிமைத்து மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் இந்த செயலி உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் தகவல்களை ‘ஆரோக்கிய சேது’ வழங்கி வருகிறது. இதனை அனைத்து பொதுமக்களும் தங்கள் மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவுறுத்தியது. இந்நிலையில் இந்திய ராணுவத்தினரிடம் இருந்து தகவல்களை திரட்ட பாகிஸ்தானால் இருந்து உருவாக்கப்பட்ட போலியான ஆரோக்கிய சேது ஆப் இணையதளங்களில் உலாவி வருகிறது என இந்திய ராணுவம் தனது படை வீரர்கள் மற்றும் துணை ராணுவத்தினரை எச்சரித்துள்ளது.

வாட்ஸ் அப், எஸ்எம்எஸ் மூலம் பாகிஸ்தான் உருவாக்கிய போலியான ஆரோக்கிய சேது ஆப் பரவி வருவதாகவும் அதை யாரும் டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டாம் என்றும் படை வீரர்களை இந்திய ராணுவம் எச்சரித்துள்ளது. அப்படி ஒருவேளை இன்ஸ்டால் செய்தால் face.apk, imo.apk, normal.apk, trueC.apk, snap.apk and viber.apk போன்ற மால்வேரைகளயம் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொள்கிறது அந்த ஆப். இதன் மூலம் ஸ்மார்ட்போன்களை தங்கள் கட்டுபாட்டிற்கு கொண்டு வந்துவிடுகிறது. அத்துடன் தகவல்களை சேகரிக்கிறது.

இதற்கான சர்வர் நெதர்லாந்தில் இருப்பதாக காட்டுகிறது என்ற ராணுவ அதிகாரி தெரிவித்தார். தற்போதைய நிலையில் ஆரோக்கிய சேது ஆப்பை ‘mygov.in’ என்ற இணையதளத்தில் உள்ள லிங்கில் இருந்து மட்டும் டவுன்லோடு செய்து பயன்படுத்துமாறும் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.