இஸ்தான்புல்:

கடந்த 2008ம் ஆண்டில் மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்குக் காரணமான…  ஐ.நா., மற்றும் அமெரிக்காவினால் பயங்கரவாதி என்று அறிவிக்கப்பட்ட, பயங்கரவாதி ஹபீஸ் சயீதை விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் நாட்டின் லாகூர் உயர் நீதிமன்றத்தின் நீதி மறுசீராய்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு நடந்தது.  உலகையே அதிரவைத்த இந்த குண்டுவெடிப்பில் ஏராளமனவர்கள் பலியானார்கள்.

இந்தக் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் என்ற பயங்கரவாதியாவார். பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின், தாய் அமைப்புதான் ஜமாத் உத் தவா ஆகும்.  தலைவரான  உலகின் பல பகுதிகளில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக இவர்மீது புகார் உண்டு. இவரை தேடப்படும் பயங்கரவாதி என்று அமெரிக்கா உட்பட சில நாடுகளும், ஐ.நா. மன்றமும் அறிவித்துள்ளன. இவரது ஜமாத் உத் தவா அமைப்பையும் தடை செய்துள்ளன.

பாகிஸ்தானுக்குத் தப்பிச்சென்ற ஹபீஸ் சயீத் அங்கும் சில நாசகார வேலையில் ஈடுபட்டதாகக்கூறி அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டார். லாகூர் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் கடந்த ஜனவரி மாதம் முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

ஹபீஸ் சயீதுக்கு எதிராக புகார் அறிக்கை தாக்கல் செய்யக் கோரி லாகூர் உயர் நீதிமன்ற மறுசீராய்வு வாரியம் அரசை வலியுறுத்தி வந்தது, ஆனால் அரசு இதற்குச் செவிசாய்க்கவில்லை.

கடந்த மாதம் அவர் மீதான பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் அரசு திரும்பப் பெற்றது.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், யவார் அலி, அபுஸ் சமி கான், ஏலியா நீலம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் ஹபீஸ் சயீத் ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள், ஹபீஸ் சயீதை வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கும்படி உத்தரவிட்டனர். சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு வரும் வெள்ளிக்கிழமை ஹபீஸ் சயீத் வீட்டுக்காவல் விலக்கப்படும் என்று அந்நாட்டு சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.