பாக். பயங்கரவாதிகள் தாக்குதல்: 5 இந்திய ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகர்,

ம்மு-காஷ்மீரில் மத்திய ரிசர்வ் படை போலீஸ் பயிற்சி முகாமில்  பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் லேத்போரா (Lethpora) கிராமத்தில் சிஆர்பிஎஃப் 185வது பட்டாலியன் படையின் பயிற்சி முகாம் உள்ளது.

இந்த முகாம் மீது அதிகாலை 2 மணி அளவில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

வீரர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது இந்த திடீர் தாக்குதல் நடைபெற்றதால், சுதாரித்த வீரர்கள் எதிர்தாக்குதல் நடத்தினர்.

. பல மணி நேரம் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 5 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

மத்திய ரிசர்வ் படை வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகளை தேடும் வேட்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மத்திய ரிசர்வ் படை போலீஸ் பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய் இ மொகம்மது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.