ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

டிராலின் குல்சான்போரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அப்பகுதியை அவர்கள் சுற்றி வளைத்தனர்.

அப்போது, கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை மூண்டது.  அதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவன், ஹிஸ்புஸ் முஜாஹிதீன் அமைப்பு கமாண்டர் ஹம்மத் கான் ஆவான்.

2017ம் ஆண்டு முதல் கமாண்டராக செயல்பட்டு வந்தான். அனந்த்நாக்கில் ஹிஸ்புல் அமைப்பின் 3 தீவிரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். தற்போது மேலும் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 

கார்ட்டூன் கேலரி