குஜராத் ரயில்வே போலீஸ் ஆப்-ல் இருந்த பாகிஸ்தான் ரயில் படம் நீக்கம்

அஹமதாபாத்:

குஜராத் ரயில்வே காவல்துறை வெளியிட்ட பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆப்-பில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் ரயில் புகைப்படம் நீக்கப்பட்டது.

ரயில் பயணிகளின் வசதிக்காக, குஜராத் ரயில்வே காவல்துறை சார்பில் ”Surakshit Safar” என்ற பெயரில் ஆப்-பை கடந்த மாதம் 29-ஆம் தேதி குஜராத் உள்துறை இணை அமைச்சர் பிரதீப்சிங் ஜடேஜா அறிமுகம் செய்தார். இந்த ஆப் பில் பாகிஸ்தான் ரயிலின் படம் இடம் பெற்றிருந்தது. இது பார்த்த தங்கள் விமர்சனங்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். இதன் பின்னர் தங்கள் தவறை உணர்ந்த காவல்துறையினர், ஆப் – பில் இடம் பெற்றிருந்த படத்தை நீக்கியுள்ளது.

ரயில் பயணிகளுக்கு ஏதேனும் அவசர் உதவி தேவைப்பட்டாலோ, ரயில்களில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் பார்த்தாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான நபர்கள், பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் குறித்தும் புகார் அளிக்க விரும்பினாலோ இந்த ஆப்-பை பயன்படுத்தலாம் என்று அதற்கான வசதிகள் இந்த ஆப்-பில் இடம் பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்