புல்வமா தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும் :  மோடி ஆவேசம்

டில்லி

புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்

பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிர வாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது என்னும் தற்கொலப்படை வீரன் 350 கிலோ வெடிபொருள் கொண்ட வாகனத்தை சி ஆர் பி எஃப் வீரர்கள் சென்ற வாகனங்களில் மோதி வெடிக்க செய்துள்ளார்.   இதில் 45 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இது குறித்து பிரதமர் மோடி, ”புல்வாமா மாவட்டத்தில் நடந்த தீவிர வாத தாக்குதலில் வீர மரணமடைந்தோரின் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.   அனைத்து உலக நாடுகளும் ஒன்றிணைந்தால் தீவிரவாத்தை ஒடுக்க முடியும்.  இந்தியாவின் உறுதித்தன்மையை புல்வாமா தாக்குதல் சீர்குலைக்காது.

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய உரிய பதிலடி கொடுக்கும்.   இதற்காக நாடு ஒன்று திரண்டுள்ளது.    இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும்.    பாகிஸ்தான் மிகப் பெரிய தவறு செய்துள்ளது.   தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பாகிஸ்தான் இந்தியாவை சீர்குலைக்க நினைக்கிறது.   அதன் கனவு ஒரு போதும் நிறைவேறாது.   இந்தியா தீவிரவாதத்துக்கு உதவுவோரை ஒரு போதும் மன்னிக்காது.   இந்த தீவிரவாத தாக்குதலை தயவு செய்து அரசியல் ஆக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.