பாகிஸ்தான்: தற்கொலைப் படை தாக்குதலில் 8 பேர் பலி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பாலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் தேவாலயத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர்.

இதில் 8 பேர் பலியாயினர். மேலும 44 பேர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்த ராணுவம் மற்றும் போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.