400 கோயில்கள் புனரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லமாபாத்:

400-க்கும் மேற்பட்ட கோயில்களை புனரமைத்து, இந்துக்களிடம் கொடுக்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.


பிரிவினையின்போது, பெரும்பாலான இந்துக்கள் எல்லை தாண்டி இந்தியாவில் நிரந்தரமாக தங்கிவிட்டனர். பாகிஸ்தானில் தங்கிவிட்ட இந்துக்கள் சிறுபான்மையினத்தவராகிவிட்டனர்.

அதன்பின்னர், அங்கிருந்த இந்து கோயில்கள் மற்றும் நிலங்களை மதராஸாக்கள் எடுத்துக் கொண்டன.
தங்களது கோயில்களை புனரைமைக்க வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு தொடர்ந்து இந்துக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் முழுவதும் உள்ள 400-க்கும் மேற்பட்ட இந்து கோயில்களை புனரமைக்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, கோயில்களை புனரமைத்து இந்துக்களிடம் அரசு கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 2 கோயில்கள் புனரமைக்கப்படும் என அறிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, முதல்கட்டமாக சியால்கோட் மற்றும் பெஷாவரில் உள்ள கோயில்கள் புனரமைக்கப்படும் என்றும், 1000 ஆண்டுகள் பழமையான சிவாலயா தேஜா சிங் கோயிலை புனரமைக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இந்த கோயில் மர்ம கும்பலால் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.