இந்துக்களின் புனித தலம் : தேசிய பாரம்பரிய சின்னமாக பாகிஸ்தான் அறிவிப்பு

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டில் இந்துகளின் புனித தலமான பஞ்ச தீர்த்தம் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்துகளின் புனித தலமான பஞ்ச தீர்த்தம் அமைந்துள்ளது. இங்கு ஐந்து குளங்கள் உள்ளதால் இந்த பெயர் வழங்கப்பட்டுளது. இங்கு அமைந்துள்ள கோவிலை சுற்றி பசுமையான புல்தரையும் ஏராளமான பேரிச்சை மரங்களும் உள்ளன. இந்த தலம் பெஷாவர் நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

இதை கையர் பக்துன்குலா மாநில அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை நிர்வகித்து வருகிறது. பஞ்ச தீர்த்தம் இந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சாச்சா யுனுஸ் பூங்காவில் உளது. கையர் பக்துன்குலா மாநில அரசு பஞ்ச தீர்த்தம் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை தேசிய பாரம்பரிச்ய சின்னமாக அறிவித்துள்ளாது.

இந்த பஞ்ச தீர்த்தம் உள்ள இடம் மகாபாரதக் காலத்தில் அரசர பாண்டுவுக்கு சொந்தமாக இருந்ததாக கூறப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் இரு தினங்கள் இந்துக்கள் இந்த குளங்களில் வந்து புனித நீராடுவது வழக்கமாகும். கடந்த 1747 ஆம் வருடம் இந்த கோவில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த துரானிய மன்னரால் சேதமாக்கபட்டது. அதன் பிறகு 1834 ஆம் வருடம் உள்ளூர் இந்துக்கள் இதை புதுப்பித்துள்ளனர்.