அத்துமீறி தாக்குதல் நடத்திய பாக். வீரர்கள் 5 பேர் பலி: இந்திய வீரர்கள் அதிரடி

ஸ்ரீநகர்:

காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய  அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் வீரர்களை இந்திய வீரர்கள் வேட்டையாடினர். இதில் 5 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான்  படையினரும், அவர்களது ஆதரவு பயங்கரவாத குழுவினரும் அடிக்கடி ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றனர் அதற்கு இந்திய வீரர்களும் தக்க பதில் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களின் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதற்கு இந்திய ராணுவத்தினர் கொடுத்த பதிலடியில் பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

எல்லையோரம் பாகிஸ்தான் ராணுவத்தினர் அமைத்திருந்த  3 பதுங்கு குழிகளையும் இந்திய ராணுவத்தினர் குண்டு வீசி அழித்தனர். மேலும்,  அந்நாட்டு ராணுவ முகாம்களளையும் சேதப்படுத்தினர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், இந்திய ராணுவத்தினருக்கும்   இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.