இஸ்லாமாபாத்: டிக் டாக் செயலிக்கு பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.

உலகின் பல நாடுகளில் டிக் டாக் என்ற செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீன் ஏஜ் மத்தியில் மிகவும் பிரபலமான இந்த செயலியில் அநாகரிக பதிவுகள் வெளியிடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந் நிலையில்  டிக் டாக்கில் ஒழுக்கக்கேடான, அநாகரிகமான வீடியோக்கள் வெளியாவதாக  கூறி, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் அந்த செயலிக்கு தடை விதித்து இருக்கிறது.
தொடர் புகார்களை அடுத்து தடை விதிக்கும் முடிவுக்கு வந்ததாக அந்நாடு  தெரிவித்துள்ளது. சீனாவின் நட்பு நாடான பாகிஸ்தான், அந்நாட்டு நிறுவனத்திற்கு சொந்தமான செயலிக்கு தடை விதித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.