பாகிஸ்தான் தீவிரவாதக் குழு தலைவர் உயிர் ஊசல்

ஸ்லாமாபாத்
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தீவிரவாதக் குழு தலைவர் படுத்த படுக்கையாக உயிர் ஊசலாடும் நிலையில் உள்ளார்.
இந்தியாவில் தொடர்ந்து தீவிர வாத தாக்குதலை நடத்தி வரும் ஜைஷ் ஈ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார். பாகிஸ்தானை சேர்ந்த இவரும் இவருடைய தம்பிகளான ரவுஃப் அஸ்கர் மற்றும் அதார் இப்ராகிம் ஆகியோர் தொடர்ந்து இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் தொடர்ந்து பயங்கரவத தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

மசூத் அசார் இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களை அசார் நடத்தி உள்ளார். கடந்த 1999 வரை இவர் இந்திய சிறையில் அடைபட்டிருந்தார். அப்போது இவருடைய குழுவை சேர்ந்தவர்கள் இந்திய விமானம் ஒன்றை கந்தகாருக்கு கடத்திச் சென்றனர். அந்த விமானப் பயணிகளை மீட்க இந்திய அரசு இவரை விடுதலை செய்தது. அதற்கு பிறகு அவர் பல பயங்கரவாத தாக்குதல்களையும் தற்கொலைப்படை தாக்குதலையும் இந்தியாவில் நிகழ்த்தி உள்ளார்.
கடந்த 2001 ஆம் வருடம் நடந்த பாராளுமன்ற தாக்குதல், 2005ஆம் வருடம் நடந்த அயோத்தி தாக்குதல், 2016 ஆன் வருடம் நடந்த பதான்கோட் விமான நிலையத் தாக்குதல் ஆகியவைகளை முன்னின்று நடத்தியவர் ஆவார். காஷ்மீர் மாநிலத்தில் ஜைஷ் ஈ முகமது இயக்கத்தின்ர் அசாரின் தம்பிகள் தலைமையில் தொடர்ந்து பயங்கர வாத் தாக்குதல்கள் நிகழ்த்தி வருகின்றன்ர்.
தற்போது மசூத் அசார் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. சுமார் 50 வயதாகும் இவருக்கு முதுகுத்தண்டு மற்றும் சீறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட அசார் உயிருக்கு போராடி வருவதாக அவர் குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார். பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு ராணுவ அதிகாரியும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.