இஸ்லாமாபாத்: ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் சொத்துக்களை முடக்கவும், அதன் தலைவர் மசூத் அசாரின் பயணங்களுக்குத் தடை விதிக்கவுமான அதிகாரப்பூர்வ உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது பாகிஸ்தான் அரசு.

இதுதவிர, ஆயுதங்கள் வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் மசூத் அசாருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், ஐக்கிய நாடுகள் அமைப்பால், சர்வதேச தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டார் மசூத் அசார்.

ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா இயக்கங்களின் மீதான ஐ.நா. தடை கமிட்டி, ‍‍‍ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்கு, மேற்கூறிய இயக்கங்களுடன் இருக்கும் தொடர்பை சமீபத்தில் பிரகடனப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்மானம் 2368 (2017) -ஐ முற்றிலும் அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் மேற்கொள்ளும் என அந்நாட்டு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.