pakistan bomb 1
 
பாகிஸ்தானில் தற்கொலைத் தீவிரவாதி நடத்திய  குண்டுவெடிப்பில்  50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். , மேலும் 200 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில்,  ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்தவர்கள் கொண்டாடிய குல்ஷன் இக்பால் பூங்காவில் இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டு உள்ளது.
மருத்துவமனையில், சிகிச்சையளித்து வந்த மருத்துவர் விவரிக்கையில், 40 பிணங்கள்  வந்து அவசர ஊர்தியில் வந்து இறங்கின. மருத்துவமனையின் அனைத்து இடங்களிளும் காயம்பட்டவர்கள் கிடத்தப் பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகின்றது. எங்கும் ரத்தமும், முனகல் சத்தமுமாய் மருத்துவமனை காட்சியளிக்கின்றது என்றார்.
200 க்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் ஆபத்தான நிலையில் உள்ளனர்,” . பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்றும் அஞ்சுகின்றனர். “
பூங்காவிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் ஜாவெத் அலி கூறுகையில், பெரும் மக்கள் கூட்டம் பூங்காவில் கூடி இருந்ததால், என் வீட்டினரை வெலியில் செல்ல வேண்டாம் என்று கூறி இருந்தேன். குண்டுவெடிப்ப்பில் என் வீட்டு ஜன்னல் சிதிலமடைந்தது. என் வீட்டுச் சுவரில் மனிதச் சதை சிதறி உள்ளது.  
இந்திய –பாகிஸ்தான் எல்லை அருகில் அமைந்துள்ள லாகூர் நகரம், சமீப காலங்களில் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வந்தது.   
சமீபத்தில், பெஷாவர் நகரில், ஒருப் பேருந்தில், தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் மரணமடைந்தனர்.
தாலிபானின் ஒரு பிரிவான ஜமாத்-உல்-அஹ்ரார் வைச் சேர்ந்த ஒரு தற்கொலைத் தீவிரவாதி லாகூரில் நடத்திய தாக்குதலில்  55 பேர் பலியானது அதிகப்பட்ச பலி எண்ணிக்கை யாகும்.