லாகூர்:

சீனாவுக்கு இளம் பெண்களை அனுப்பி  விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானில் இருந்து கடத்தப்பட்டு சீனாவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சீனாவில் விபச்சாரம் தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலும், வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அங்கு தங்கியிருந்து ரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் அங்கு 4 பாகிஸ்தானியர்கள் உடன் 8 சீனர்களும் விபச்சாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி அதிகாரி  ஜமீல் அஹ்மத், பாகிஸ்தான் பெண்கள் சீனாவுக்கு கடத்தப்பட்டு அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணித்து தடுத்து வருவதாகவும், இந்த கடத்தலில் பல குழுக்கள் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் குறிப்பாக  பாகிஸ்தானின் கிறிஸ்தவ சிறுபான்மையினரை இலக்காக வைத்துள்ளனர் என்றும்  ஜமீல் தெரிவித்து உள்ளார்.

அதுபோல,  பாகிஸ்தான் இளம்பெண்களை சீனர்களுக்கு திருமணம் செய்து வைத்து, அவர்களை சீனாவுக்கு அழைத்துச்சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக 8 சீனர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள சீனத் தூதரகம், சட்டவிரோதமாக பெண்கள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான கடற்படைக்கு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.