அதிரடி தாக்குதல் எதிரொலி: ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு!

 

இஸ்லாமாபாத்,

ந்தியா – பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு  பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

ஜம்முகாஷ்மீர் உரி எல்லையோர முகாம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய ராணுவம் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதி முகாம்கள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் உள்பட பலர் கொல்லப்பட்டனர்.

pakistan-indian-guard759

அதைத்தொடர்ந்து அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவத்தின்ர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய ராணுவத்தினரும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக எல்லையோர மக்கள் வீடுகளை காலிசெய்துவிட்டு பாதுகாப்பான இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இரு நாடுகளுக்கு இடையிலேயும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டாரில்  உள்ள எல்லை கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மூன்று பேர் கொல்லப் பட்டனர். இதில் ஒரு வீரரின் தலை துண்டிக்கப்பட்டு,  உடல் சிதைக்கப்பட்டு இருந்ததாக செய்திகள் வெளியானது.

ஆனால்,  இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் மறுத்தது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள பாகிஸ்தான் நிலைகளின்மீது அதிரடி  தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் 3 வீரர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.

இதனால் இருநாடுகளிடையே மேலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதையடுத்து ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.

ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் ராணுவ பிரிவு தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி