இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்:

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘புலியன், சப்ரார், ஹர்பல்உள்ளிட்ட பல பகுதிகளில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. கனூர் என்ற கிராமத்தில் பொது மக்கள் 4 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்காக இந்திய தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியது. அவரிடம் பாகிஸ்தான் அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.