பாகிஸ்தானுக்கும் தடை விதிக்க அமெரிக்கா முடிவு?  

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து பல அதிரடி முடிவுகளை அறிவித்துவவருகிறார் டொனால்ட் ட்ரம்ப்.

சமீபத்தில், ஈரான், ஈராக், லிபியா, ஏமன், சோமாலியா, சூடான், சிரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகளுக்கு 90 நாட்களுக்கு விசா வழங்க தடை விதித்தார்.

இந்தப் பட்டியலில் பாகிஸ்தானும் சேர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளதாக வெள்ளை மாளிகை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது பாகிஸ்தானை கலக்கமடையச் செய்துள்ளது.