இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் அமைதியையே விரும்புகிறது. போரை விரும்பவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார்.
navaz
பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர்,
ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து உரிய விசாரணையை இந்தியா மேற்கொள்ள வில்லை  எனவும்,  விசாரணை நடத்தாமலேயே உரி தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நவாஸ், ஜம்மு காஷ்மீர் உட்பட அனைத்து விவகாரங்களிலும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பமாக உள்ளது என்றார்.
மேலும் பாகிஸ்தான் போரை விரும்பவில்லை என்றும், அமைதியை விரும்புவதாகவும் நவாஸ் ஷெரிப் குறிப்பிட்டுள்ளார்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள்,  புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியதை  தொடர்ந்து நவாஸ் ஷெரிப் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.