பாகிஸ்தான் கனவு நிறைவேறாது? காஷ்மீர் முதல்வர் மெகபூபா

 ஜம்மு:

பாகிஸ்தான் அதிபர் நவாஷ்செரீப்பின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என பாகிஸ்தான் முதல்வர் தெரிவித்து உள்ளார்.

தீவிரவாதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் காஷ்மீர் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார். அது குறித்து  உயர் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் முதல்வர் மெகபூபா, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இதற்கிடையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப், காஷ்மீர் மாநிலம், பாகிஸ்தானுடன் இணையும் நாளுக்காக காத்திருப்பதாக சொல்லியிருந்தார்.‘

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காஷ்மீர் முதல்வர் மெகபூபா ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அண்மையில் தெரிவித்துள்ள கருத்து ஒருநாளும் நிறைவேறாது என்றும், மாறாக இருநாடுகளுக்கு இடையே மேலும் பிரச்சனை ஏற்படவே வழிவகுக்கும் என்றும், ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த, பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி குற்றம் சாட்டினார்.

ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு 17-வது நாளாக நீடிக்கிறது. இதன் காரணமாக கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.

ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், கலவரக்காரர்களை கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்துவதை தவிர்க்க வேண்டும் என பாதுகாப்பு படையினரைக் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

காஷ்மீர் மக்களுக்கு இருக்கும் மனக்குறைகளை தீர்க்க எவருடன் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக திரு. ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.