இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில்  பொதுத்தேர்தல் வரும்  ஜூலை மாதம்  25, 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறும் என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் மம்மூன் ஹுசைன் வேண்டுகோளை ஏற்று, தேர்தல் நடத்துவதற்கான தேதிகளை பாகிஸ்தான்  தேர்தல் ஆணையம் அனுப்பியது. அதில் தேர்தல் சட்டப்படி வாக்களிக்கும் நாளாக முன்மொழியப்பட்ட தேதிகளில் ஒன்றை அமைக்க கோரியது.

அதன்படி ஜூலை கடைசி வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும்,  ஜூன் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் வரும் இந்த மாதம் 31ந்தேதியுடம் முடிவடைய உள்ளது. அதுபோல மாநில சட்டமன்றங்களின் பதவி காலமும் மே 31ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. பஞ்சாப்,   சிந்து, கைபர் பாக்தூன்க்வா மற்றும் பலூசிஸ்தான்  மாநிலங்களின் ஆட்சி காலமும் முடிவடைய உள்ளது.

அதன் பின்னர் நாட்டில் பொதுத் தேர்தலை மேற்பார்வையிடுவதற்கு, காபந்து அரசாங்கம் பொறுப்பேற்கும். எதிர்கட்சித் தலைவரின் ஆலோசனையுடன் பிரதம மந்திரி நியமனம் செய்யப்படுவார். அவர் தேர்தலை  வெளிப்படையான முறையில் நடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து 60நாட்களுக்கு தேர்தல் வேலைகள் முடிவுற்று பாகிஸ்தானில்புதிய அரசாங்கம் பதவி ஏற்கும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.