டிராவில் முடிவடைந்த பாகிஸ்தான் – இங்கிலாந்து 2வது டெஸ்ட்!

லண்டன்: பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்பார்த்தபடியே டிராவில் முடிவடைந்துள்ளது.

இந்தப் போட்டியில், மழை பெரியளவில் குறுக்கிட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மட்டும்தான் தனது முதல் இன்னிங்ஸை முழுமையாக ஆடியது. அந்த அணி மொத்தம் 236 ரன்களை அடித்தது.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட், அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், இங்கிலாந்து அணிக்கு முழுமையான வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அணி, மொத்தமாக 43.1 ஓவர்தான் ஆடியது. மொத்தம் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களை எடுத்தபோது, ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது அப்பாஸ் 2 விக்கெட்டுகளும், ஷஹீன் அப்ரிடி மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.