இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் ஆட்டத்துடன் தோல்வி அடைந்து வெளியேறியது. இதையொட்டி அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து மிக்கி ஆர்தர் நீக்கப்பட்டார். புதிய தலைமைப் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விண்ணப்பங்களைக் கோரியது.

இந்த விண்ணப்பங்கள் பெற நேற்று கடைசி தினமாகும்.  இந்த பதவிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் மிஸ்பா உல் ஹக் விண்ணபித்திருந்தார். இதனால் அவர் ஏற்கனவே உள்ள கிரிக்கெட் கமிட்டி பதவியை ராஜினாமா செய்தார்,

தற்போது பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அத்துடன் ஐயின் தலைமை தேர்வர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.