இஸ்லமாபாத்:

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை, அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பு மற்றொரு வழக்கிலும் கைது செய்துள்ளது.


லண்டனில் உள்ள சொத்துகள் தொடர்பான பார்க் லேன் வழக்கில் ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரும் ஆவார்.

போலி வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.15 கோடி பரிவர்த்தனை செய்து பண மோசடி வழக்கில் பாகிஸ்தான் நீதிமன்றம் சர்தாரியையும், அவரது சகோதரியையும் ஏற்கெனவே சிறையில் அடைத்திருந்தது.

இந்நிலையில், பார்க்லேன் வழக்கில் மீண்டும் சர்தாரி கைது செய்யப்பட்டார்.

இஸ்லமாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற நிலையில், சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகளை சர்தாரி முற்றிலும் மறுத்துள்ளார். பாகிஸ்தான் எதிர்கட்சிகளை களங்கப்படுத்த பாகிஸ்தான் ஆளும் கட்சியான தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சி செய்யும் முயற்சி என்றார்.

2007-ம் ஆண்டு பெனாசீர் பூட்டடோ கொல்லப்பட்டதும்,சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவரானார்.