இந்தியாவைப் பாராட்டும் பாகிஸ்தான் முதல் பெண் விண்வெளி வீராங்கனை

ராச்சி

பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை நமிரா சலீம் இந்திய விண்வெளி ஆய்வு நிலைய விஞ்ஞானிகளை பாராட்டி உள்ளார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிலையமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2  விண்கலத்தின் ஆர்பிரேட்டர் நிலவைச் சுற்றி வருகிறது.  அதிலிருந்து பிரிந்த விக்ரம் லாண்டர் நிலவில் தரை இறங்க வைக்க விஞ்ஞானிகள் முயன்று வந்தனர்.   விக்ரம் லாண்டர் நிலவுக்கு 2.1 கிமீ தொலைவில் தொடர்பு இழந்தது.   இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.

ஆயினும் உலக நாட்டு விஞ்ஞானிகள் பலரும் இந்தியாவின் இந்த முயற்சிக்குப் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர்.    விண்வெளி ஆய்வில் முதல் இடத்தில் உள்ள நாடுகளில்  ஒன்றான அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் இந்தியாவுக்குப் புகழாரம் சூட்டி உள்ளது.   தாமும் இஸ்ரோவுடன் இணைந்து ஆய்வு நடத்த விரும்புவதாகவும் நாசா அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் முதல் பெண் விண்வெளி வீராங்கனையான நமிரா சலீம். “இந்தியா மற்றும் இஸ்ரோ நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லாண்டரை தரை  இறக்க முயன்றமைக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.   சந்திரயான் 2 திட்டமானது இந்தியாவுக்கு மட்டுமின்றி தெற்கு ஆசிய நாடுகள் அனைத்துக்கும் ஒரு மாபெரும் வெற்றி என்பது மறுக்க முடியாது. ” எனத் தெரிவித்துள்ளார்.