பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கொரோனா…

இஸ்லாமாபாத்:

லக நாடுகளை புரட்டிப்போடும் கொரோனா வைரஸ், பாகிஸ்தானையும் மிரட்டி வருகிறது. அந்நாட்டின்  வெளியுறவுத் துறை அமைச்சர்  ஷா மெஹ்மூத் குரேஷி  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலகின் 210 நாடுகளில் தலைவிரித்தாடும் கொரோனா வைரஸ், பாகிஸ்தானிலும் தீவிரமாக பரவி வருகிறது. பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் 3,387 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 225,283 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,619 பேர் உயிரிழந்த நிலையில்,  குணமடைந்தோர் எண்ணிக்கை  1, 25,094 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலையில், 95,570 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்,  பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர்  ஷா மெஹ்மூத் குரேஷி கொரோனாவால் பாதிக்கப்பட்டு,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே,பாகிஸ்தானில் தகவல் தொழில்நுட்ப மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் சையது அமீனுல், முன்னாள் பிரதமர்கள் யூசுஃப் கிலானி,ஷாஹித் அப்பாசி,பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியின் தலைவர் ஷாபால் ஷெரீஃப் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்களும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி