பாகிஸ்தான்: முன்னாள் பிரதமர்  மருமகன் கைது

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகன் சப்தார் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும்,  முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப்  மருமகனான ராணுவ கேப்டன் (ஓய்வு) சப்தார், ராவல் பிண்டி நகரில் உள்ள பாப்ரா பஜாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தலைநகரான லண்டன் நகரில் பிளாட்டுகள் வாங்கியதில் செய்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நவாஸ் ஷெரீப்பிற்கு 10 வருட சிறை தண்டனை வழங்கி கடந்த வெள்ளி கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது.

 

நவாஸ் செரீப்

நவாஸ் ஷெரீப்பின் மகளும் அவரது அரசியல் வாரிசுமான மரியத்துக்கு 7 வருட சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. .  அவர் தேர்தலில் போட்டியிடவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

நவாஸின் மனைவி குல்சூம் இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடந்த மாதத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.  அவருக்கு துணையாக நவாஸ் மற்றும் மகள் மரியம் லண்டன் நகரில் இருக்கின்றனர்.  கடந்த  ஜூலை 13ந்தேதி பாகிஸ்தான் நாட்டிற்கு திரும்புவேன் என்று நவாஸ் ஷெரீப் லண்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.  சிறையில் இருந்தும் எனது போராட்டத்தினை தொடருவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சப்தார்

இந்நிலையில், இந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நவாஸின் மருமகனான சப்தார் கைது செய்யப்பட்டு உள்ளார்.

முன்னதாக அவரைக் கைது செய்யக்கூடாது என முஸ்லீம் லீக் கட்சியின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சப்தாரின் பெயர் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுஉள்ளது.  ஆகவே அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.