பாகிஸ்தானில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: இன்று இரவே வாக்கு எண்ணிக்கை

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில்  பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், நவாஸ் ஷெரீப் கட்சிக்கும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கான் கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி நாடு முழுவதும்  பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் இன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

கடந்த 2013ம்  ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் கட்சி வெற்றி பெற்று நவாஸ் ஷெரீப்பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டார். ஆனால், அவர் பானாமா பேப்பர் குற்றச்சாட்டு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அmன் காரணமாக பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அவருடைய சகோதரர் ஷெபஸ் ஷெரீப்பை முன்னிறுத்தி ஆட்சியை கைப்பற்ற  மும்முரமாக செயல்பட்டு வந்தது.

அதுபோல, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சிக்கட்டிலில் அமர, முன்னாள்  கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சியும் களத்தில் உள்ளது. இது இரு கட்சிகள் இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.

இந்த இரு கட்சிகளுக்கும் ஈடுகொடுக்கும் வகையில்,  பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் களத்தில் உள்ளது.

இந்த நிலையில, இன்று காலை 8 மணிக்கு வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 85 ஆயிரம் ஓட்டுப் பதிவு மையங்களில், மக்கள்  வாக்களித்து வருகின்றனர்..  மாலை  6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் ஓரிடத்தில் கொண்டு வரப்பட்டு, இன்று இரவே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.