ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா கோயிலை திறந்துவிட பாகிஸ்தான் அரசு அனுமதி

 லாகூர்:

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள சாரதா கோயிலை திறந்துவிட பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.


இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சாரதா கோயிலை இந்து பக்தர்கள் தரிசனத்துக்கு திறந்துவிட ஏற்கெனவே கோரியிருந்தோம்.

முன்னதாக, அரசு அதிகாரிகள் சிலர் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, பிரதமருக்கு அறிக்கை அளித்திருந்தனர்.

சாரதா கோயில் மிகப் பழமையானது. இது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்படுகிறது. அசோகாரால் நிர்மாணிக்கப்பட இந்த கோயில், இந்துக்களின் முக்கிய வழிபாட்டு தலமாக இருந்தது” என்றார்.

இந்நிலையில், சாரதா கோயிலை திறக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்களும் அங்கு சென்று வழிபடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.