பாக்.ஆட்சி பயங்கரவாதிகளால் நடத்தப்படுகிறது… : சுப்பிரமணியன்சாமி குற்றச்சாட்டு

அகர்தலா:

பாகிஸ்தானில்  ஆட்சி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு புதிதாக பதவி ஏற்றுள்ள பிரதமர்  இம்ரான்கான் வெறும் உதவியாளர்தான் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான  சுப்பிரமணியன்சாமி கூறி உள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் இந்துத்துவா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு சுப்பிரமணியன் சாமி அகர்தலாவில் செய்தியார்களை சந்தித்தார்.

அப்போது, பாகிஸ்தானில், தற்போதைய பிரதமர் இம்ரான்கான் வெறும் உதவியாளர்தான் என்று குற்றம் சாட்டினார். அங்கு  ஐஎஸ் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவமே ஆட்சி செய்து வருவதாக கூறியவர்,  அவர்களுக்கு உதவியாளராகவே பிரதமர் இம்ரான்கான்  பணியாற்றி வருகிறார் என்று கூறினார்.

மேலும், வங்கதேசம் குறித்து தனது கண்டனத்தை பதிவு செய்த சாமி, ‘இந்தியா தொடர்ந்து வங்கதேசத்துக்கு ஆதரவு அளிக்கும், ஆனால் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்து கோவில்களை இடித்துத் தள்ளுதல், இந்து கோவில்களை மசூதியாக மாற்றுவதல், இந்துக்களுக்கு முஸ்லிம்களை மாற்றுவதல் போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று வற்புறுத்தினார்.

வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்களை வங்கதேச மக்கள் நிர்பந்திக்கும் பட்சத்தில் இந்தியாவில் வாழும் இந்துக்குள் இந்த பிரச்சனையில் தலையிட வேண்டி வரும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.