நவாஸ்ஷெரீபை மருத்துவமனையில் சேர்க்க அரசு அனுமதி

இஸ்லாமாபாத்:

உடல் நலக்குறைவால் அவதிப்படும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை மருத்துவமனையில் சேர்க்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ராவல்பிண்டி அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் மையத்தின் டாக்டர் குழு சிறைக்கு சென்று பரிசோதனை செய்தது. இதய செயல்பாட்டில் பிரச்னை இருப்பது இசிஜி சோதனையில் தெரியவந்தது.

நவாஸ் ஷெரீபை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் டாக்டர்கள் என பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று கொண்ட பாகிஸ்தான் இடைக்கால அரசு, நவாஸ் ஷெரீபை இஸ்லாமாபாத் மருத்துவ அறிவியல் மையத்தில் அனுமதிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. விரைவில் அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.