மும்பை தாதா தாவூத் இப்ரகீம் கராச்சியில் இருக்கிறார் : பாகிஸ்தான் ஒப்புதல்

ஸ்லாமாபாத்

ந்திய அரசு தேடி வரும் மும்பை தாதா  தாவூத் இப்ரகீம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் வசிப்பதைப் பாகிஸ்தான் அரசு முதல் முறையாக ஒப்புக கொண்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி உத்வி செய்வதாக எழுந்த புகாரை அடுத்து அந்நாட்டைச் சர்வதேச நிதி அமைப்புக்கள் கிரே பட்டியலில் வைத்துள்ளன.  இந்த நிதி உதவியை தடுத்து நிறுத்தாவிட்டால் பாகிஸ்தான் நாடு கருப்பு பட்டியலில் வைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.   அவ்வாறு கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டால்  அந்நாட்டுக்கு எவ்வித நிதி உதவியும் கிடைக்காது.

கடந்த 1993 ஆம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாகப் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜமாத் உத் தவா அமைப்பு  செயல்பட்டு வந்தது.   இந்த அமைப்பின் ஜஃபீஸ் சயீத் மற்றும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் மசூத் அசார உள்ளிட்டோருக்குப் பாகிஸ்தான் அரசு நிதித் தடைகள் விதித்துள்ளது.

இந்த மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய பிரபல தாதா தாவூத் இப்ரகீம் இந்தியாவில் இருந்து தப்பி ஓட்டி விட்டார்.  அவருக்குப் பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்ததாக வெளி வந்த தகவலை அந்நாட்டு அரசு தொடர்ந்து மறுத்து வந்தது.   இந்நிலையில்  மும்பை தாதா தாவூத் இப்ரகீம் கராச்சி நகரில் உள்ளதாக முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் தாவூஹ்த் இப்ரகீமுக்கும் நிதித் தடைகள் விதித்துள்ளதாக பாகிஸ்தான் அரசு   அறிவித்துள்ளது.