இஸ்லாமாபாத்:

ம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், பஞ்சாப் டூ லாகூர் செல்லும்  சம்ஜவுதா  விரைவு ரயில் சேவையை நிறுத்தி நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே சில வான்வழித்தடங்களையும் பாகிஸ்தான் மூடி உள்ளது.

‘காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்தியஅரசு ரத்து, அதை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆனால், இந்தியா எங்கள் உள்நாட்டு விஷயம், நீங்கள் தலையிடாதீர்கள் என்று எச்சிரிக்கை செய்தது. அதையடுத்து, நேற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையில், தேசியப் பாதுகாப்புக் குழு கூட்டம்  நடைபெற்றது. அதில், இந்தியாவுடனான தூதரக உறவு மற்றும் வர்த்தக உறவுகளை முறிப்பதாக அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. டில்லியிலிருந்து  பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைக்கவும், தங்கள் நாட்டிலுள்ள இந்தியத் தூதரை திருப்பி அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய திரைப்படங்கள் இனி பாகிஸ்தானில் திரையிடக்கூடாது என அறிவித்த இம்ரான்கான் அரசு, நேற்று இரவு முதல் பாகிஸ்தான், இந்தியா விமானங்கள் பறப்பதற்கான தடை விதித்து 9 வான் வழித்தடங்களில் 3 தடங்களை மூடிவிட்டது.

இந்தியா ஆப்கானிஸ்தான் விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்லும்படி பாகிஸ்தான் விமான போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. லாகூர் பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் 46,000 அடி உயரத்திற்கு கீழாக பறக்கக் கூடாது என்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான்  இடையே இயக்கப்பட்டு வந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையையும் நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.

ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட  சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக 1976-ம் ஆண்டு முதல்  இந்தியா, பாகிஸ்தான் இடையே சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் தொடக்க காலத்தில் இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்கும் பாகிஸ்தானின் லாகூர் நகருக்கும் இடையே தினசரி இயக்கப்பட்டு வந்த நிலையில், பின்னர் காலிஸ்தான் அமைப்பினரின் அச்சுறுத்தலால் அது லாகூரில் இருந்து பஞ்சாப்பின் அட்டாரியுடன் நிறுத்தப்பட்டது. கடந்த 1994ம் ஆண்டு முதல்  இருமுறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது, இந்த சம்ஜவுதா ரெயில் சேவையை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.  ஏற்கனவே பயணத்துக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள்,  தங்கள் பணத்தை லாகூர் டி.எஸ் அலுவலகத்திலிருந்து திரும்பப் பெறலாம் என அறிவித்துள்ளது.

தற்போது வாகா எல்லையில் இந்த ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என இந்தியன் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.