இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் சிறையில் வாடும் 261 இந்தியக் கைதிகளின் பட்டியலை பாகிஸ்தான் அரசு இந்திய அரசிடம் வழங்கி உள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான கோபத்தில் இருந்து வந்ததும், அதையடுத்து, இந்தியா பாலகோட் தாக்குதலை நடத்தி இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது.

தற்போது, பதற்றம் தனிந்துள்ள நிலையில், இரு நாடுகளும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆண்டு இரண்டு முறை தங்கள் கைவசம் உள்ள கைதிகளின் தகவல்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்வது என்ற 2008ம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி, தற்போது அதற்கான நடவடிக்கைகளை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து,  இஸ்லாமாபாத்தில்  உள்ள  இந்திய தூதரகத்திடம், பாகிஸ்தான் அரசு, தங்களது சிறைகளில் உள்ள இந்திய சிறைக் கைதிகளின் பட்டியலில் 52 பொதுமக்கள், 209 மீனவர்கள் என 261 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இதைத்தொடர்ந்து, இந்தியச் சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளின் பட்டியலையும், டில்லி யில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் இந்தியா அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.