நாணய நெருக்கடியை சமாளிக்க சீனா கஜானாவை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்:

வெளிநாட்டு நாணய நெருக்கடியை தவிர்க்கும் வகையில் தொடர்ந்து கடன் வழங்க வேண்டும் என்று சீனாவை பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் வரை சீனாவிடம் இருந்து 400 கோடி டாலரை பாகிஸ்தான் கடனாக பெற்றுள்ளது. சர்வதேச நிதியக கண்காணிப்பகத்தில் இருந்து வெளியேறுவதை தவிர்க்கும் வகையில் வெளிநாட்டு பண புழக்கம் இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கடன் வழங்குவதை நிறுத்தினால் எதிர்காலத்தில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் பாதிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தெற்கு ஆசிய நாடுகளில் 6,000 கோடி டாலர் மதிப்பில் சீன அதிபர் ஜின்பிங்கின் கனவு திட்டமான பெல்ட் மற்றும் சாலை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இது குறித்து பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சர்வதேச நிதியக கண்காணிப்பகத்தை அணுகுவதற்கு முன்பு, இந்த திட்டத்துக்கான நிதி ஆதாரம் குறித்த விபரங்களை வெளியிட்டாக வேண்டும். இல்லை என்றால் சில உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்.. இது குறித்து சீன அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எங்களது கவலைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

ஒரு முறை சர்வதேச நிதியக கண்காணிப்பு திட்டத்தில் இருந்து நாங்கள் முடக்கப்பட்டால், அதன் பின்னர் எந்த நிபந்தனையின் அடிப்படையில் சீனா பொருளாதார வழித்தட திட்டத்தில் முதலீடு செய்கிறது என்ற முழு விபரங்களையும் தெரிவித்தாக வேண்டும். இந்த திட்டத்தை சர்வதேச நிதியகம் ஆய்வு செய்தால் இதற்கான செலவு செய்யக் கூடிய வகையிலான பொருளாதார விபரங்களை பாகிஸ்தான் அளிக்க வேண்டியிருக்கும்’’ என்று அவர் தெரிவித்தார்.